நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மிக தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவாக இன்று (16) முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்
இன்று காலை முதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவிபுரம் மந்துவில் முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் கலந்துகொண்டு ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவாளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்
அந்த வகையில் முல்லைத்தீவு நகரில் இன்று மாலை 3 மணியளவில் கரைதுறைப்பற்று பகுதி இணைப்பாளர் அருள் நாதன் தலைமையில் தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது
வாக்குரிமை என்பது மக்களின் ஜனநாயக ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், நமது முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்துவதே காலத்தின் தேவையாக உள்ளது.இதேநேரம் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவிட்டது. குறித்த தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தல்.குறிப்பாக அனுபவமற்ற, முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளின், வெற்று பேச்சுக்களுக்கும் போலி விளம்பரங்களுக்கும் மக்கள் இம்முறை மயங்கமாட்டார்கள் என்பதும் உண்மை.
அதேநேரம் அனுபவமுள்ள, முதிர்ச்சியுள்ள, நாட்டை மீட்டெடுத்த தலைவரே உங்கள் தேர்வாக இருக்க வேண்டும். அந்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை நான் கூறிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை.ஏனெனில் நீங்கள் ஏற்கனவே அவருடைய எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வெற்றிபெறச் செய்ய தீர்மானத்து விட்டீர்கள். வரிசை யுகத்தில் நின்று வலி சுமந்த நாள்களை நாம் மறந்துவிடக்கூடாது.
அந்த நிலையிலிருந்து மீட்டு இன்று இயல்புநிலை உள்ளதெனில் அதற்கு ஜனாதிபதி ரணிலே காரணம். இதேவேளை நெருக்கடியான சூழ்நிலையிலும் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, உறுமய திட்டம், அஸ்வெசும மற்றும் பல விடயங்களை அவர் செய்து காட்டியுள்ளார்.எனவே, எதிர்வரும் 21 ஆம் திகதி உங்களின் வாக்குகள் அனைத்தும் ரணில் விக்ரமசிங்கவின் எரிவாயு சிலிண்டர் சின்னத்திற்கானதாக இருப்பது அவசியம்” என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.