முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் பாவனை அதிகரித்து வருகின்றமை அண்மைய குற்றச்சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஐஸ் பாவனையால் குடும்பஸ்தர் ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளமை அதனை விட ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட அறுவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளமை இரண்டு சம்பவங்கள் ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஐஸ் பாவனைஅதிகரித்துள்ள பிரதேசமாக குறிப்பிட்டு கூறக்கூடிய சில கிராமக்கள் காணப்பட்டாலும் பொலீசாரின் நடவடிக்கை போதாது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை இன்று 28.08.2024 அன்று மாங்குளம் பொலீசாரால் கைதுசெய்யப்பட்ட மூவர் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது ஐஸ்,ஹெரோயின் போன்ற பாவித்துள்ளமை சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் மாங்குளம் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பில் இந்த மாதம் இடம்பெற்ற சம்பவம்..
கடந்த 18.08.2024 அன்று மன்னாகண்டல் பகுதியில் மாட்டுக்கொட்டிலில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் காணப்பட்டுள்ளமை அவர் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் உட்கொட்டமை பிரேத பரிசேதமனைகளில் தெரியவந்துள்ளதுடன் அந்த குடும்பஸ்தருடன் சேர்ந்து ஐஸ் போதைப்பொருள் பாவித்த புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளது
நண்பர்களுடன் ஒன்றாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் நுகர்ந்தவேளை உயிரிழந்த வசந்தபுரம் மன்னாகண்டலை பிறப்பிடமாகவும் 2ம் வட்டாரம் கோம்பாபில் கைவேலி புதுக்குடியிருப்பினை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையான 28 அகவையுடைய கந்தையா மோகனதாசன் என்பவரின் உடலத்தின சுமார் 6 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள மன்னாகண்டல் பகுதியில் உள்ள உயிரிழந்தவர் மாட்டுக்காவல் காத்துவந்த கொட்டிலில் கொண்டு சென்று போட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கைவேலி பகுதியினை சேர்ந்த மூவரை கைதுசெய்த புதுக்குடியிருப்பு பொலீசார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 03.09.2024 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் 27.08.2024 அன்று புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது உடையார் கட்டு குரவில் பகுதியில் பாவனையற்ற வீடு ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு தயாரான 6 இளைஞர்களை கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஐஸ்போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் 17தொடக்கம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இவர்களில் நால்வர் குரவில் உடையார்கட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் ஏனைய இருவர் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது 5 பேர் ஐஸ் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சான்றுப்பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றமை இவ்வாறான சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
போதைப்பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை விடுவிக்க அரசாங்கம் அரச சார்பற்ற நிறுனவங்கள் பல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதனால் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றமை கவலையளிக்கின்றது