அனலைதீவு யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகவும் உருத்திரபுரம் கிளிநொச்சியினை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சிவநெறிச்செல்வர் நடராசா இரத்தினம் அவர்களின் நூற்றாண்டு நிறைவினை முன்னிட்டு நடராஜா இரத்தன தீபம் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியினை சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
தாயாரின் நூற்றாண்டு நினைவாக பிள்ளைகள் அவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் முருகன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் உருத்திரபுரம் கிழக்கு,சிவநகர்,செல்வாநகர்,ஜெந்திநகர், நான்கு கிரமசேவையாளர் பிரிவின் 1500 வரையான குடும்பங்களுக்கு தலா 3500 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளன.