புதுக்குடியிருப்பில் கடந்த மாதத்தில் பல்வேறு இடங்களில் வணிக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாரிடம் வணிக நிலையங்களின் உரிமையாளர்கள் முறையிட்ட போதும் அது தொடர்பில் அக்களை கொள்ளாத புதுக்குடியிருப்பு பொலீசார் கொள்ளையர்களை சிவநகர் இளைஞர்கள் மற்றம் வணிக நிலைய உரிமையாளர் பிடித்து பொலீசிடம் ஒப்படைத்த போது அவர்களை பொலீசார் தான் பிடித்துள்ளதாக பொலீசார் அறிவித்துள்ளார்கள்.
கடந்த மாதம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒட்டுசுட்டான் வீதியில் உள்ள மது பல்பொருள்வாணிபம்,சிவா பல்பொருள்வாணிபம் மருத்துவமனைக்கு முன்பாக,தனுசன் பல்பொல்பொருள் வாணிபம் 6ம் வட்டாரம் சிவநகர்,உதயன் பல்பொருள் வாணிபம் மந்துவில் சந்தி ஆனந்தபுரம், செம்மன்குன்று பகுதியிலும் பல்பொருள் வாணிபம் ஆகியன உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பங்கள் தொடர்பில் பொலீசாரிடம் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்.
சிவநகர் இளைஞர்கள் விழிப்படைந்து இரவு இரவாக கொள்ளையர்களின் நடமாட்டத்தினை அவதானித்து கடந்த 01.08.2024 அன்று சிவநகர் பகுதியில் வைத்து இரண்டு கொள்ளையர்களை பிடித்து வீதிப்போக்குவரத்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
அதன்பின்னரே பொலீசார் அவர்களை பொலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு அவர்கள் கொள்ளையிட்ட பொருட்கள் என்பனவற்றை மீட்டு அவற்றை வைத்து படம் எடுத்துவிட்டு அவர்கள்தான் கொள்ளையர்களை பிடித்துள்ளதாக அறிவித்துள்ளமை பாதிக்கப்பட்ட வணிகர்கள் மற்றும் கொள்ளையர்களை பிடித்த இளைஞர்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பொலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருந்தாலும் அவர்களின் ஒத்துளைப்பினை கண்டுகொள்ளாத நிலை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காணப்படுகின்றது.
இதேவேளை இந்த வணிக நிலையங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் புதுக்குடியிருப்பு வர்த்த சங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்