Wednesday, April 30, 2025
HomeUncategorizedமக்களின் வாக்கினை சிதறடிக்கவே பொது வேட்பாளர் !

மக்களின் வாக்கினை சிதறடிக்கவே பொது வேட்பாளர் !

ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழர் மரபுரிமை கட்சி அறிக்கை 

நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முல்லைதீவு மாவட்டத்தில் தளமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழர் மரபுரிமைக் கட்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது

இதுவரை காலமும் எமது வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலை மக்களின் எதிர்பார்ப்புகள் அபிலாசைகள் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்குடன் அணுகவில்லை என்பது நிதர்சனமான உண்மை 

இது இவ்வாறு இருக்கையில் இம்முறை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு ஒரு தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு பெரும்பாலான கட்சிகள் முனைப்பை காட்டி வருவதுடன் அதற்கான ஏற்பாடுகளை பெருவாரியாய் முன்னெடுத்து வருகின்றன

 இந்த செயற்பாடானது வெறுமனே ஜனாதிபதி தேர்தலில் மக்களின் வாக்குகளை சிதற டிக்கச் செய்து தாங்கள் ஆதரவளிக்கும் ஒரு பெரும்பான்மை இனத்தைச சேர்ந்த வேட்பாளரை வெற்றி பெறச் செய்து நமதும் தம்மைச் சார்ந்தவர்களதும் முன்னேற்றத்தை அடைதலே ஆகும்

 இதனால் அடிப்படை மக்களுக்கு எவ்வித நன்மையோ பலன்களோ தீர்வுகளோ முன்னேற்றமோ கிடைக்க எவ்விதமான நடைமுறை சாத்திய மும் இல்லை 

எனவே மேற்கூறிய எமது மக்களுக்கு பலனற்ற விடயத்தில் கவனம் செலுத்துவதை விடுத்து இம்முறை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலை எமது மக்களின் அடிப்படை தேவைகள்  அபிவிருத்தி முன்னேற்றம் வளமான வாழ்வு என்பதனை நோக்கிய எமது எதிர்பார்ப்புகள் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எமது கோரிக்கைகள் நிபந்தனைகளை ஏற்று உடன்படும் பெரும்பான்மை வாக்கு பலம்முள்ள ஒரு வேட்பாளருடன் இணக்கப்பாடு ஒன்றினை உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மக்களின் பெறுமதி மிக்க வாக்குகளை வழங்கி நாம் ஆதரவளிக்கும் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய நாம் தயாராக உள்ளோம் 

இதன் மூலம் எமது மக்கள் சார்ந்த அடிப்படை பொருளாதார சமூக முன்னேற்றத்தை அடைய வழி செய்தலே நமது கட்சியின் தார்மீக சிந்தனை ஆகும் 

ஜனநாயகத்தில் வாக்குகளே மக்களின் பலம் எனவே எமது பலத்தையே நாம் நமக்கானதாக்குவோம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments