Tuesday, April 29, 2025
HomeUncategorizedபுகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

போராட்டத்தின் மூலம் வேலையை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தினால் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

தனது தொழிலை தாமே கைவிட்டதாக கருதப்பட்டு வேலை நீக்கம் செய்யப்படும் என முதல் ஆயிரம் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டதை அறிந்த புகையிரத தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது தொழிற்சங்கப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளனர் என தொழிள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார் . இவர்களின் போராட்டம் முடிவுக்கு வருவதற்கு முன்பே பயணி ஒருவரின் உயிர் பறிபோய்விட்டது இது கவலைக்குரிய விடயமாகும்

“தனது தொழிலை தாமே கைவிட்டதாக கருதப்பட்டு வேலை நீக்கம் செய்யப்படும் என ஊழியர்களுக்கு கடத்தும் சென்றதாகும் ௧௯௮௦ ஜூலை மதத்தினை மக்கள் மீண்டும் 2024 ஜூலையில் நினைவில் கொள்ள ஆரம்பித்துள்ளனர் .
கொடுப்பனவுக்காக வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட சில தொழிற்சங்கங்கள் தங்கள் உயிரை மாய்த்து போராட்டத்தை கைவிட்டுக்கொண்டனர்
‘தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடளாவிய நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜயகமு ஸ்ரீலங்கா’ கிளிநொச்சி மாவட்ட மக்கள் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சி இந்து கல்லூரி மைதானத்தில் நேற்று (12) நடைபெற்றது

இங்கு கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்

வடக்கில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் தமது வீடுகளிலும் பதுங்கு குழிகளிலும் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களும் அதிபர்களும் இருந்தனர் ஆனால் தெற்கில் உள்ள ஆசிரியர்களும் அதிபர்களும் தங்களது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக வேண்டி புகையிரதப் போராட்டக்காரர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்து பாடசாலை மாணவர்களின் கல்வியை அடகு வைக்கின்றனர் என இதன் போது அமைச்சர் சுட்டிக்காண்டினார்

மேலும் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்
வடக்கில் யுத்தம் இடம்பெற்ற போதிலும், ஆசிரியர்களும் அதிபர்களும் இங்கு பதுங்கு குழிகளில் பணிபுரிந்தனர்.அதே வேளையில் இன்று தெற்கில் உள்ள ஆசிரியர்களும் அதிபர்களும் ஒரு அரசியல் குழுவின் தேவைக்காக எனது சொந்த பிள்ளைகளின் பாடசாலைக்கல்வினை சீர்குலைத்துள்ளனர்.

ஆகவே இன்னொரு வேலைநிறுத்தத்தால் பிள்ளைகளின் கல்வி தடைபடல், மருத்துவமனைகளில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படல், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டால், அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் வீதியில் இறங்கினால், என்ன முடிவு எட்டப்படும் என்பதை யாராலும் எதிர்வு கூற முடியாதுள்ளது

இன்று சமூக வலைதளங்களில் போராட்டக்காரர்களின் நிலையயைப் பார்க்கும் போது தெரிகின்றது மக்கள் எந்தளவு இவர்கள் மீது வெறுப்புக்கொண்டுள்ளனர் என்பதை எனவே இப்போராட்டக்காரர்களிடம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் உள்ள சிவில் அமைப்புகளை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1984 ஆம் ஆண்டு கிளிநொச்சி தனியான நிர்வாக மாவட்டமாக பிரிக்கப்பட்ட போதிலும்,தொடர்ந்தும் இங்கு யுத்தம் நடைபெற்றதால் தனி மாவட்டமாக அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பை இழந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான தலைமையகம் அமைந்திருந்த பிரதேசமாக இந்த மாகாணம் பல பாரிய பின்னடைவுகளை சந்தித்தது ஆனாலும் இலங்கையில் கிளிநொச்சி கனிமவளங்களுக்கு ஏற்ற பிரதேசமாகும் .இங்கு சிவப்பு-மஞ்சள் கலப்பு நிறங்களைக்கொண்ட “லாடோசோல்” எனும் மண்ணில் அலுமினியம், சிலிக்கன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

எனவே நாம் இந்த மண்ணிலிருந்துமுன்னேற வேண்டும், மாறாக சிங்களவர், தமிழர், முஸ்லீம் என பிரிந்துவிடாமல் இலங்கையராக
அப்போதுதான் இந்த நாட்டை முன்னேற்ற முடியும்.என்றும் அமைச்சர் தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments