Tuesday, April 29, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் இராணுவமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட தமிழ்பெண்ணின் உடலம்!

முல்லைத்தீவில் இராணுவமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட தமிழ்பெண்ணின் உடலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார் கட்டு பகுதியில் வசித்து வந்த 29 அகவையுடை நிசானி என்ற இளம் குடும்ப பெண் யாழ்ப்பாண்த்தில் வைத்து இரண்டாவது கணவனால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 06.07.2024 அன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவத்தில் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக  கேப்பாபிலவு இராணுவ முகாமில் கடமையாற்றிய நிலையில் இராணுவத்தினை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார் ஒரு பிள்ளை உள்ள நிலையில் இராணுவத்தினால் வீடுகட்டி கொடுக்கப்பட்டுள்ளது முதற்கணவன் ஏற்கனவே திருமணம் செய்துள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து பிரிந்து வந்த நிலையில் மற்றும் ஒருவரை திருமணம் செய்து ஒரு பிள்ளை உள்ள நிலையில் இருவருக்கும் இடையில் குடும்ப பிரச்சினை தொடர்ந்து வந்துள்ளது.

இவர்கள் மூங்கிலாறு தெற்கில் வசித்து வந்துள்ளார். இவர் தனது இரண்டாவது கணவனுடன் யாழ் கொழும்புத்துறை ஆனந்தவடலி பகுதியில் வசித்து வந்த நிலையில் குடுத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் கணவன் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணின் உடலம் இன்று 09.07.2024 மூங்கிலாறு தெற்கில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டு பூரண இராணுவ மரியாதையுடன் மூங்கிலாறு தெற்கு இந்து மயானத்தில் உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு அங்சலி செய்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments