Tuesday, December 3, 2024
HomeUncategorizedகிளிநொச்சியில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியினை தொடக்கிவைத்த இராஜாங்க அமைச்சர்!

கிளிநொச்சியில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியினை தொடக்கிவைத்த இராஜாங்க அமைச்சர்!

கிளிநொச்சியில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியினை தொடக்கிவைத்த இராஜாங்க அமைச்சர்!

பெண்கள்,குழந்தைகள் விவகாரங்கற் மற்றும் சமூக அதிகார அமைச்சின் கீழ் தேசிய சமூக வளர்ச்சி நிறுவனத்தினால் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி இன்று 05.07.2024  தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட  சமூர்த்தி  திணைக்களத்தின் ஒழுங்கு படுத்தலில் தேசிய சமூக வளர்ச்சி நிறுவனத்தினால் ஆங்கில டிப்ளோமா பயிற்சி நெறி தொடக்க நிகழ்வு கிளிநொச்சியில் உள்ள தேசிய சமூக வளர்ச்சி நிறுவனத்தின் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரவீந்திர விதானாராச்சி கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன்,கிளிநொச்சி மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி இன்பராஜா உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

சமூக வலுவூட்டல்,சமூகஅபிவிருத்தி மற்றும் சமுர்த்தி அபிவிருத்தியினை உள்ளடக்கிய அமைச்சின் கீழ் ஆங்கில மொழி திறனை இளம் சமூகம் வளர்த்துக்கொள்ளவேண்ம்  என்ற நோக்குடனும்  வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இந்த பயிற்சி நெறி முதல் தடவையாக கிளிநொச்சி மாவட்டத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி நெறிக்கு கிராமங்களில் சமூர்த்தி குடும்பங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு 150 மணிநேரம் ஆங்கில டிப்ளோமா பயிற்சி வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது இந்த பயிற்சி இன்ற சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments