முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு முதன்மை வீதிகள் காடுகளுக்கு ஊடாகவே காணப்படுகின்றது இவ்வாறு காடுகள் சூழ்ந்த பிரதேசத்தில் காட்டு விலங்களின் நடமாட்டத்தினை காணக்கூடியதாக இருக்கின்றது
குறிப்பாக பயணிகளுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் காட்டுயானைகள் வீதிகளின் குறுக்கே செல்கின்ற அவைகள் செல்லும் பாதைகளை இனம் கண்டு அவற்றை வீதியில் அடையாளப்படுத்த வேண்டிய தேவை சம்மந்தப்பட்ட திணைக்களத்திற்கு உண்டு.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு புதிதாக வரும் பயணிகள் குறிப்பாக மாங்குளம் தொடக்கம் கொக்காவில் வரையான ஏ9 வீதி மற்றும் மாங்குளம் தொடக்கம் ஒட்டிசுட்டான் வீதீ,ஒட்டுசுட்டான் முள்ளியவளை வீதி,முள்ளிவளை களிக்காடு ஊடாக நெடுங்கேணி வீதி,நெடுங்கேணி ஊடாக ஒட்டுசுட்டான் வீதிகளில் காட்டுயானைகள் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் வீதியினை கடந்து செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.
சில இடங்களில் வீதிகளில் நின்று சண்டைபிடிப்பதனையும் அவதானிக்கமுடிந்துள்ளது இவ்வாறு ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒரு பகுதியில் மாத்திரம் இங்குள்ள பிரதேசங்களில் வனவிலங்குகள் பாதையினை கடந்து செல்வதால் அவதானமாக வாகனங்களை செலுத்துங்கள் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அறிவித்தல் பதாகை ஒன்ற நாட்டப்பட்டுள்ளது இந்த இடத்தில் இதனை பார்ப்பவர்களுக்கு மாத்திரம்தான் தெரிகின்றது இது காட்டுயானை பிரதேசம் என்று (யானையின் படத்தினையும் பதாகையில் போட்டுள்ளார்கள்)
இவ்வாறு ஏனைய பகுதிகளான மேற்குறிப்பிட்ட வீதிகளிலும் இந்த அறிவித்தல் பதாகையினை சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் நாட்டிவைக்கவேண்டும்,குறிப்பாக யானை,புலி,கரடி,உள்ளிட்ட காட்டுமிருகங்கள் வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகள் ஊடாக பயணிக்கும் பயணிகள் இவ்வாறான பதாகைகளை இனம் கண்டு குறித்த பகுதியி ஊடாக அவதானமாக பயணிக்க முடியும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.