Wednesday, April 30, 2025
HomeUncategorizedஇலங்கையால் அங்கிகரிக்கப்படாத இலங்கையின் உயர்ந்த மனிதன் தமிழன்!

இலங்கையால் அங்கிகரிக்கப்படாத இலங்கையின் உயர்ந்த மனிதன் தமிழன்!

இலங்கையின்  உயரமான மனிதன் என்று அழைக்கப்படும் குணசிங்கம் கசேந்திரன் இவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் 1ம் வட்டாரம் கைவேலியில் தற்போது வசித்து வருகின்றார்.

இவரை எல்லோரும் இலங்கையின் உயரமான மனிதன் என்று அழைக்கப்படுகின்றார்கள்.. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் எந்த அங்கிகாரமும் கிடைக்காத நிலையில் இவரை இலங்கையின் உயர்ந்த மனிதன் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டுதான் மகிந்தறாஜபக்ச காலத்தில்தான் என்னை உயரமானவர் என்று அங்கிகரித்தார்கள் புனர்வாழ்வு பெறும் போது அவர்தான் ஜனாதிபதி
புனர்வாழ்விற்கு பின்னர் மகிந்தறாஜபக்ச ஆட்சியின் பின்னர் மைதிரி,பிறகு கோத்தபாய,இப்போது ரணில் வந்தார் எந்த அங்கிகாரமும் இல்லை.

இலங்கையில் உயரமானமனிதர் என்று என்னை பேட்டி எடுக்கின்றார்கள் கிராமசேவையாளராலோ அல்லது பிரதேச செயலகத்தினாலோ எனக்கான அங்கிகாரம் தரவில்லை இலங்கையில் எதற்கான பதிவும் இல்லை என்னை அங்கிகரியுங்கள் என்று நான் கோரவில்லை என்று தெரிவித்த அவர் தன்னை முதன்முதல் அங்கிரம் கிடைத்தமையினை பற்றியும் தெரிவித்துள்ளார்

முதன்முதல் புனர்வாழ்வில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு லங்கா மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோதுஅப்போதுதான் என்னை பரிசோதித்து என்னை அந்த மருத்துவர் எனது மருத்துவ அட்டையில் 7அடி 2அங்குலம் உயரம் என்று எழுதி இலங்கையில் உயரமான மனிதராக இவர்தான் இருக்கலாம் என்று சொல்லி எழுதி தந்தார் அவர் சொன்னார் எனக்கான போசாக்கு வசதிகள் சகலதும் செய்துகொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்

அதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகும் நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில்  6000 பேருக்குள் என்னை முதன்மை படுத்தி கவனித்த அதிகாரிகள் என்னை நன்றாக கவனித்தார்கள் படுக்கை,உணவு வசதிகள் என அனைத்தும் ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஆனால் இப்போது தனது வாழ்வாதாரத்திற்காக முச்சக்கரவண்டியில் பாடசாலை மாணவர்களை  ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார் இதுதான் இவரது வாழ்வாதாரமாக காணப்படுகின்றது.

எனது இரண்டு கால்களால்தான் நான் எல்லாத்தையும் இழந்து வருகின்றேன்.

அரசாங்கத்தினால் ஊனம் உற்ற பணம் என்று மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபா கொடுக்கின்றார்கள் எனது கால் காயப்பட்ட கால்  இதானல் நிற்கமுடியாது ஊனம் வடிகின்றது இரண்டுகால்களாலும்தான் எனது வாழ்கையில் எல்லாத்தினையும் இழந்துகொண்டு வருகின்றேன்.
எனது மனைவி என்னை பிட்டு பிரிந்த நிலையில் நான் இரண்டு பிள்ளைகளையும் வைத்து வளர்த்து வருகின்றேன்.

இப்போது எனது காலினை ஏற்பட்ட காயத்தினை மாற்றவேண்டும் எனது தொழிலை பலப்படுத்தவேண்டும் எனது பிள்ளைகளை வளர்க்கவேண்டும்
இலங்கையில்  நான் உயரமான மனிதன் என ஊடகங்களால் அறிவிக்கப்பட்ட பின்னர் நான்கு அரசாங்கங்கள் மாறி மாறி வந்துள்ளன ஆனால் யாரும் எனங்கான அங்கிகாரத்தினை தந்ததில்லை எனது சுய உழைப்பில்தான் இயங்கிக்கொண்டு ஒரு பேசும் பொருளாகவே இருக்கின்றேன்.

என்னை உயரமனிதன் என்று ஊடகங்கள் அறிவித்த பின்னர் என்னை சிங்கள மக்கள் வந்து வந்து படம் எடுத்தார்கள் எனக்கு ஓய்வில்லை  தமிழ் மக்கள் என்னை உயரமனிதன் என்று அறிந்து கொண்டார்கள்.

இவ்வாறு இலங்கையின் உயரமனிதனாக தமிழன் ஒருவர் காணப்படுகின்றார் என்ற காரணத்திலா அவருக்கான அங்கிகாரம் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவர் வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி கிராமத்தினை சேர்ந்த அரச அதிகாரிகள் அவருக்கான அங்கிகாரத்தினை வழங்க முன்வரவேண்டும் என்பது எமதுகோரிக்கையாகும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments