Wednesday, April 30, 2025
HomeUncategorizedவிசுவமடுவில் சிறுமியை கர்பமாக்கிய கணவன் கைது!

விசுவமடுவில் சிறுமியை கர்பமாக்கிய கணவன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 அகவையுடைய சிறுமியினை கர்பமாக்கிய குற்றச்சாட்டில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 24 அவையுடைய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் விசுவமடு தொட்டியடி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவியாக இருந்த 15 அகவை சிறுமியை காதலித்து வீட்டை விட்டு கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய வெள்ளப்பள்ளம் சுதந்திரபுரத்தினை சேர்ந்த 24 அகவையுடைய இளைஞனை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தேடிவந்த பொலீசார் 10.06.2024 அன்று கைதுசெய்துள்ளார்கள்.

15 அகவை சிறுமியினை கூட்டிச்சென்ற இளைஞன் திருகோணமலையில் உறவினர்களின் வீட்டில் தங்கி நின்று குடும்பம் நடத்தியுள்ளார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி,கிளிநொச்சி போன்ற பகுதிகளில் உறவினர்களின் வீடுகளில் தங்கி நின்று சிறுமியுடன் குடும்பம் நடத்தியுள்ளார் இதன் பின்னர் தனது இடமான வெள்ளப்பள்ளத்திற்கு சிறுமியினை வீட்டிற்கு கூட்டிவந்துள்ளார்.

சிறுமி நான்குமாத கர்ப்பம் தரித்த நிலையில் காணப்பட்டுள்ளமையினால் புதுக்குடியிருப்பு பொலீசார் 24 அகவையுடைய கணவனை கைதுசெய்துள்ளார்கள்.
சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட சிறுமியின் கணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

பெற்றோர்களுக்கு..
பெண்பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் மீது நீங்கள் அக்கறையாக இருங்கள் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையினையும் கண்காணியுங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இளவயது திருமணங்கள் கர்பம் தரித்தல் போன்ற சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துகொண்டு செல்கின்றது பெற்றோர்களின் கண்காணிப்பில் தான் இவை அனைத்தும் தங்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments