நாட்டை அதளபாதாளத்தில் இருந்து மீட்டவர் ரணில் என அனைவரும் சொல்கிறார்கள்!

நாட்டின் பொருளாதார சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அரசியல் சவாலாக எடுத்துக் கொள்ளாமல், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்க்காக ஏற்றுக்கொண்டது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார் .

ஹம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை விளையாட்டரங்கில் கடந்த (10) அன்று ஆரம்பமான ‘ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் பதினான்காவது கட்டத்தின் அங்குரார்பண நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்

“சிலரால் தாங்கள் இடதுபுறம் அல்லது வலதுபுறம் அல்லது எங்கு செல்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது, அவ்வாறு நிகழும்போது ​​​​வழியைக் கண்டுபிடிக்க நமக்கு ஒரு திசைகாட்டி தேவை. நாம் காணாமல் போகும் போது, ​​ஒரு திசைகாட்டி நமக்கு சரியான வழியை காட்டுகிறது இடதுசாரிகளையும், வலதுசாரிகளையும் குழப்பிவிடாமல் நாட்டைக் கட்டியெழுப்பும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை நாங்கள் செயற்படுத்தி வருகின்றோம்.

நாடு வீழ்ந்த இடத்தில் இருந்து கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டோம்.இந்த நாட்டை மீட்க வேண்டும். எனவேதான் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இப்போது வடக்கு தெற்கை கண்டுகொள்ளாமல் குழம்பிப்போய் இருப்பவர்கள் பேசும்போது ரணில் கூறுவது சரிதான் என்று சொலிகிறார்கள் . நாட்டை அதல பாதாளத்திலிருந்து மீட்டவர் ரணில் என இன்று அனைவராலும் சொல்லப்படுகிறது .

நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் இலங்கையை மீட்டெடுக்கும் தலைவன் இதற்குத் தேவை. இரண்டே வருடங்களில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து ஓர் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டோம் வலிமையுடனும் ஆற்றலுடனும் எழுந்து நின்று முன்னோக்கி ஓடும் அளவிற்கு இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

அதனால்தான் படித்த தலைமை தேவை. நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் பேசுவது சரியாகப் போகாது. வேலை செய்ய வேண்டும் ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவையானது இங்கு பொருட்களுடன் வந்து மக்களுக்கு நிவாரணம் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் நாட்டில் இவ்வாறான நிலை இல்லை.

அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை. இன்று அந்த பலன்களை கிராமம் கிராமமாக மாவட்டம்தோறும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். இரண்டு வருடங்களில் இதுவே உண்மையான மாற்றம்.

அந்த நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க IMF க்கு சென்று நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இந்த வேலையை செய்யாவிட்டாலும் நட்பு நாட்டிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு செய்யலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.

நம் நாட்டில் கலாச்சார ரீதியாக மாற்றப்பட்ட வேண்டும். பொருளாதார கட்டமைப்பை மாற்ற வேண்டும். நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்.

Admin Avatar