முள்ளியவளை கோவலன் கூத்து இசை மரபிலும் ஆட்டமரபிலும் செறிவுகொண்ட ஒரு மிகச்சிறந்த கூத்து-பல்கலை இசைத்துறை தலைவர் தவநாதன் றொபேட்தெரிவித்துள்ளார்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன்ஆலய பொங்கல் நிகழ்வினை முன்னிட்டும்,காட்டுவிநாயகர் ஆலய வைகாசி பொங்கல் நிகழ்வினை முன்னிட்டும் முள்ளியவளை கலைஞர்களால் நடத்தப்பட்டு வரும் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து முல்லைமோடி ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 11.05.2024 அன்று இரவு முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ்பல்கலைக்கழகத்தின் இசைத்துறை தலைவரான தவநாதன் றொபோட் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்
முல்லைத்தீவு மண்ணில் பலவிதமான கூத்துக்கள் உள்ளன அவை ஒவ்வொன்னும் ஒவ்வொரு மரபில் உயர்ந்து நிக்கின்ற ஒரு கூத்து ஆட்ட மரபில், ஒருகூத்து இசை மரபில், ஆனால் முள்ளியவளை மண்ணின் கோவலன் கூத்து இசை மரபிலும ஆட்டமரபிலும் செறிவுகொண்ட ஒரு மிகச்சிறந்த கூத்தாக இருக்கின்றது இந்த கூத்து மரபினை நீங்கள் பாதுகாக்கவேண்டும் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தி அடுத்த சந்ததிக்கு நீங்கள் கையளிக்கவேண்டும்,
ஆனால் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற யாழ்பாண திருமலை கலாமன்றம் எல்லாவகையான ஒன்றோடு ஒன்று கலந்து அதற்கு கூத்துருவ நாடகம் என்று பெயர் வைத்து அதனை இலங்கை பாடத்திட்டத்திலும் சேர்த்திருக்கின்றார்கள்.
யாழ்ப்பாண தென்மோடியோடு மிக அதிகமாக முல்லை மோடியைத்தான் அவர்கள் கலந்திருக்கின்றார்கள் இது முல்லை மோடிக்கும் பின்னடைவினை ஏற்படுத்தும் யாழ்ப்பாண தென்மோடிக்கும் பின்னடைவினை ஏற்படுத்தும் என்கின்ற செய்தியினை இந்த இடத்தில் நான் வலியுறுத்த விரும்புகின்றோன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.