Tuesday, April 29, 2025
HomeUncategorizedதிருகோணமலையில் முள்ளியவாய்க்கால் கஞ்சி வழங்கியவர் கைது!

திருகோணமலையில் முள்ளியவாய்க்கால் கஞ்சி வழங்கியவர் கைது!

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுக்கஞ்சி வழங்கியமைக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உப செயலாளர் ஹரிஹரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று 12.05.2021 காலை திருகோணமலை சம்பூர் சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்த போது அதனை சம்பூர் பொலிஸார் தடுக்க முற்பட்டிருந்த நிலையில், மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்த தங்களது உறவுகளைக்கூட நினைவுகூர முடியாதளவிற்கு சிறிலங்கா அரசின் அடக்குமுறைகள் தொடர்வாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் பல்வேறு பகுதிகளில் மக்கள் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்து கங்சி வழங்கிவருகின்றார்கள்.
இவ்வாறு மாவட்டங்கள் தோறும் மக்களுக்கு கஞ்சி காச்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் பொலீசாரின் நடவடிக்கைஇவ்வாறு அமைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments