Tuesday, April 29, 2025
HomeUncategorizedமுல்லை சிங்கள பூமியாக மாறுகிறது!

முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது!

தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு. கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார்.

08.05.2024 வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் மகாவலி  என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது.

கொக்கதொடுவாயில் 3 கிராமங்கள் ஆறு  கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட நிலையில் குறித்த பிரதேசம் பரந்துபட்ட வயல் காணிகளைக் கொண்ட பிரதேசம் 1984 ஆம் ஆண்டு சிங்கள அரசாங்கம் திட்டம் திட்டமிட்ட முறையில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களை விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு மூன்று நாட்களில் உங்களை மீண்டும் குறித்த பகுதியில் அனுமதிக்கிறோம் என்றனர்.

ஆனால் முப்பது வருடங்கள் குறித்த பகுதிக்கு செல்வதற்காக நாம் காத்திருந்த நிலையில் விடுவிக்கப்பட்டு 14 வருடங்கள் கடந்த நிலையில் எமது காணிகள் எமக்கு ஒப்படைக்கப்படவில்லை.

குறித்த பகுதி  விவசாய காணிகளைக் கொண்டதாக காணப்படும் நிலையில்  எமது மக்கள் அங்கு விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

அங்கு வாழ்ந்த மக்களுக்கு மீன்பிடி என்றால் என்னவென தெரியாத நிலையிலும் வேறு வழியின்றி சிறு மீன்பிடியை நம்பியே தற்போது  வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது ஆமையன் குளத்தில் மூன்று ஏக்கர் காணி தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் சம்பத் நுகர நன்றாக திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான தண்ணி முறிப்பு மதுரமடு மேல் மானாவாரி காணிகளையும் சிங்கள மக்களுக்கு பிடித்துக் கொடுத்துவிட்டனர்.

சிங்கள அரசாங்கம் மனசாட்சி இல்லாத ஒரு அரசாங்கம் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் காணிகளை பிடித்து கொடுக்க முடியும் என்றால் ஒரு பகுதியை ஏனும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற மனோநிலை வர வில்லை.

ஆகவே தமிழ அரசியல்வாதிகள் இனியாவது உங்கள் வாய்களை பாராளுமன்றத்தில் திறவுங்கள் உள்ளத்தை வைங்கள பூமியாக மாற்றுவதை தடுத்து நிறுத்துங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments