வன்னியின் பெரும்சமர் எனப்படும் கிளிநொச்சி மாகவித்தயாலய அணிக்கும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அணிக்கும் இடையிலான இரண்டுநாள் துடுப்பாட்ட போட்டியில் கிளிநொச்சி மகாவித்தியாலய அணி வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கியுள்ளது.
வன்னியின் பெரும்சமர் 13 ஆவது தடவையாக இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்றுள்ளன.
இன்று இறுதிநாள் போட்டியில் 111 ஓட்டங்கள் பெற்று கிளிநொச்சி மகாவித்தியாலயம் வெற்றியினை தனதாக்கியுள்ளது.
முதல்நாள் இனிங்சில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அணி 10 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களை 44.4ஓவர்களில் பெற்றுக்கொண்டுள்ளது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்தியகல்லூரி அணி 10 விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்களை 35 ஓவர் பந்து பரிமாற்றங்களில் பெற்றுக்கொண்டுள்ளது.
இன்றைய இனிங்ஸ் ஆட்டத்தில் 110 ஓட்டங்களை இலக்காக கொண்டு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி துடுப்பெடுத்தாடியதில் 39.1 பந்து பரிமாற்றங்களில் 10 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களை பெற்றுள்ளார்கள்.
பதிலுக் துடுப்பெடுத்து ஆடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 33.1 பந்து பரிமாற்ங்களில் 6 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்று வன்னியின் பெரும்சமரர் வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கியுள்ளது.
ஆட்டக்களின் போது சிறந்து துடுப்பாட்ட வீரனாக கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி இ.விருதன் அவர்களும் சிறந்த பந்து வீச்சாளராக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியின் பி.தங்கநிலவன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.