சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்துகின்ற வட மாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை புதுக்குடியிருப்பில் இன்று சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் உற்ப்பத்தியாளர்களின் உற்ப்பத்திகளை விற்ப்பனை செய்வதும் அவர்களது உற்ப்பத்தி பொருட்களை வந்து அவர்களது உற்ப்பத்திகளை வெளிக்கொண்டு வரும் நோக்கமாகவும் ஏற்ப்பாடு செய்யப்பட்ட வட மாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
வடமாகாண தொழிற்துறை திணைக்கள பணிப்பாளர் வனஜா செல்வரத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த வட மாகாண தொழிற்துறை வர்த்தக சந்தையினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நாடாவை வெட்டி திறந்து வைத்தார்
நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவி செயலாளர் ராஜமல்லிகை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ம.சர்மிலி புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கணக்காளர் புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் ச.கிருசாந்தன் முல்லைத்தீவு மாவட்ட தொழிற்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,மன்னார், வவுனியா ஆகிய மாவட்ட உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இங்கு மாவட்டத்தின் பல்வோறு பகுதிகளை சேர்ந்த உற்ப்பத்தியாளர்களது உற்ப்பத்தி பொருட்கள் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த உள்ளூர் உற்ப்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்ப்பனையும் இடம்பெற்று வருகின்றது
குறித்த வர்த்தக சந்தை இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது