Monday, April 28, 2025
HomeUncategorizedஇரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 15,693 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை!

இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 15,693 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 15,693 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானம் விவசாய அமைப்புகளின் முழுமையான பங்குபற்றுதலுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின்  கீழான 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்கையினை  முன்னெடுப்பதற்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் இன்று(08-04-2024)  நீண்ட இழுபறிக்கு  பின்னர் பகல் 11 மணி முதல் பகல் 1 .45 மணி வரை கிளிநொசசி மாவட்டசெயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் (பதில்) முரளிதரள் தலைமையில் நடைபெற்றது

இதில் இரணைமடுக் குளத்தின் தற்போதைய நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு பதினையாயிரத்து 693 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை  மேற்கொள்வதற்கான தீர்மானம் விவசாய அமைப்பக்களின் முழுமையான ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது

அதாவது இரணைமடுக் குளத்தின் கீழான 19,830.81 ஏக்கர் மொத்த நிலப்பரப்பில் டி.08 பெரியபரந்தன் ஆர் .வீ  டீ-05 டீ-06 டீ-07  பெரியபரந்தன் டீ-08 உருத்திரபுரம்  டீ-10 குஞ்சுப்பரந்தன் உள்ளிட்ட பகுதிகள் உள்ளடங்கலாக நான்காயித்து 80.81 ஏக்கர் நிலப்பரப்பு  தவிர்ந்த பதனையாயிரத்து 693.63 ஏக்கர் இம்முறை முழுமையாகன பயிர்செய்கை மேற்கொள்வதற்கும் இம்முறை சிறுபோக செய்கை நிறுத்தப்பட்ட குறித்த பகுதிகள் ஆடுத்த போகத்தில் சுழற்சி முறையில் முன்னுரிமை அடிப்படையில்  அனுமதிக்கப்படும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 23 கமக்கார அமைப்புக்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில்  இரு அமைப்புக்கள் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் ஆதரவாக வாக்களித்து குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இதுவரை காலமும் இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக செய்கைகளின் போது இடம்பெற்ற பங்கு மோசடிகள் மற்றும் பங்கு வியாபாரங்கள் என்பன முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ள கிழக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசன குளங்கள் மற்றும் வடமாகாணத்தின் முத்தையன் கட்டு வவுனிக்குளம் உடையார் கட்டுகுளம்  போன்ற குளங்களின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற முறைகளைப் போன்றே இம்முறை இத்  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது இதனை விவசாயிகளும் முழுமையாக வரவேற்றுள்ளனர்

குறித்த இந்த கலந்துரையாடலில் மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்கள  அதிகாரிகள் மாவட்டத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments