Monday, April 28, 2025
HomeUncategorizedஜயன்கன்குளம் பிரதேச விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

ஜயன்கன்குளம் பிரதேச விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவைகள் நிலயப்பிரிவுக்குட்ப்பட்ட ஐயன்கன்குளம் பிரதேத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமக்கான மேலதிக விதைப்பு  தண்டத்தை அறவீடு செய்வதை நிறுத்துமாறும் உரிய பிரதேச கமக்கார அமைப்பை புணரமைக்குமாறும் கோரி கவணயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு வவுனிக்குளம் நீர்ப்பாசன  திணைக்களத்தின் கீழுள்ள ஐயன்கன்குளம் குளத்தின் கீழ் கடந்த 2023 சிறுபோக நெற் செய்கையின் போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக செய்கைக்கான தண்ட அறவீட்டை நிறுத்துமாறும் அல்லது கால அவகாசம் வழங்குமாறு கோரியும்  குறித்த பிரதேச கமக்கார அமைப்பை புனரமைக்குமாறு கோரியும் இன்று(01-04-2024) பகல்11மணிக்கு துணுக்காய்  கமநல சேவை நிலையம் முன்பாக குறித்த போரட்டம்  முன்னெடுக்கப்பட்டது

தொடர்ந்து விவசாயிகள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை துணுக்காய் கமநல சேவைகள் நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.வசந்தன் அவர்களிடம் கையளித்தனர்

மகஜரை பெற்றுக்கொண்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வொண்றை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்இதனையடுத்து  துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு சென்று தமது கோரிக்கை அடங்கிய  மகஜரை துணுக்காய் பிரதேச செயலாளர் திரு இ.றமேஷ் அவர்களிடம் கையளித்தனர்

மகஜரை பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் அனைவருடனும் கலந்துரையாடி ஒரு வார காலத்தில் உரிய பதில் ஒன்றை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments