இரட்டைவாய்க்கால் மாத்தளன் வரையான வீதி புனரமைத்து தருவதாக இராஜாங்க அமைச்சர் வாக்குறுதி!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பினை நடத்தி வீதி அபிவிருத்தி செய்து தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்கள்.
இராஜாயகங்க அமைச்சராக இருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அமைச்சு பதவியினை பொறுப்பெடுத்ததில் இருந்து இதுவே முதல் தடவையாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்கள்
28.03.2024 முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிகாரிகள் முல்லைத்தீவு அம்பவலவன் பொக்கனை கிராமத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.
இரட்டைவாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான வீதி புனரமைப்பு தொடர்பில் அம்பலவன் பொக்கணை கிராம அலுவலகர் கட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாயங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்,கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தியின் கீழ் இரட்டைவாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான வீதியினை புனரமைத்து தருவதாக இராஜாங்க அமைச்சர் மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
கிராமியவீதி அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள இரண்டு விதமான நிதிகளையும் யூன்,யூலை மாதத்திற்குள் இந்த வீதியினை செப்பனிடுவதற்கான நீதிகளையும் அதனை விட வடபிராந்தியத்திற்கு அதிகமான நிதிகளை கொடுக்கவேண்டிய அவசியத்தினையும்வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.