இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 27 மார்ச் 2024 அன்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கலைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னர் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரின் நலம் விசாரிக்கும் நோக்கத்துடன் விஜயம் மேற்கொண்டார்,
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவத் தளபதியை அன்புடன் வரவேற்றார் இதன்போது படையினர் தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை செலுத்தினர்.
அங்கு 59 வது காலாட் படைப்பிரிவின் படையினருக்கு உரையாற்றியாற்றியதுடன் வருகையின் நினைவாக நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் இராணுவத் தளபதி முகாம் வளாகத்தில் சந்தன மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்தார்.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, தற்போது இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு வரும் ஒட்டுசுட்டான் குழான்முறிப்பு ஓடு தொழிற்சாலையினை பார்வையிட்டார்.
இத்தொழிற்சாலை பல வருடங்களாக கைவிடப்பட்டிருந்ததுடன் சிலோன் செராமிக்ஸ் கூட்டுத்தாபனம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு இணங்க இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் 2024 பெப்ரவரி 15 ஆம் திகதி புனரமைப்புத் திட்டத்தை இராணுவம் ஆரம்பித்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அப்பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்பட்டுகின்றது.




