சிறப்பாக இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வும் வினாடி வினா போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் !

மகளிர் தினத்தை முன்னிட்டு  கொமர்ஷல் வங்கியினால் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் இன்று (13) முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது

மகளிர் தினத்தை முன்னிட்டு கொமர்ஷல் வங்கி முள்ளியவளைக் கிளையினால்  முல்லைத்தீவு கல்வி வலயத்துடன் இணைந்து வினாடி வினா போட்டி ஒன்றினை கடந்த வாரம் நடத்தியிருந்தனர்

இதன் அடிப்படையில்  வினாடி வினா போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் இன்று (13.03.2024) காலை 8.00 மணிக்கு முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலையில் சிறப்பாக  இடம்பெற்றது  

கொமர்ஷல் வங்கி முள்ளியவளை கிளையின் முகாமையாளர் செல்வரத்தினம் தினேசன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலை மாணவிகளின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது    .
குறித்த நிகழ்வில் வினாடி வினா போட்டியில் முதலாம்,இரண்டாம்,மூன்றாம் இடங்களை  பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கேடயம் மற்றும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பணப்பரிசு என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு  நான்காம் ஐந்தாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு வெற்றிப் பதக்கமும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  கொமர்ஷல் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் அருளம்பலம் ஜெயபாலன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு கல்வி வலயத்தின்  கல்வி அபிவிருத்திப் பிரிவின்  பிரதிக்கல்விப் பணிப்பாளர்  சுரேஷ்குமார் அவர்களும் கணித பாட  உதவி கல்வி பணிப்பாளர் புஷ்பகாந்தன் கொமர்ஷல் வங்கியின்  வட பிராந்திய S  M  E முகாமையாளர் எஸ் கெங்காதரன் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலை அதிபர் அருட் சகோதரி டிலீசியா ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்

குறித்த வினாடி வினா போட்டியில் ஐந்தாம் இடத்தினை புதுக்குடியிருப்பு இணைப்பாலை றோமன் கத்தோலிக்க பாடசாலை  மாணவிகளும், நான்காம் இடத்தை விசுவமடு மகா வித்தியாலய மாணவிகளும்,
மூன்றாம் இடத்தினை குமுழமுனை  மகா வித்தியாலய மாணவிகளும், இரண்டாம் இடத்தினை முல்லைத்தீவு  றோமன்  கத்தோலிக்க மகளிர் பாடசாலை மாணவிகளும், முதலாம் இடத்தினை வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவிகளும் பெற்றுக்கொண்டனர்

குடித்த நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்

Admin Avatar