முல்லைத்தீவு முள்ளியவளை கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள கணுக்கேணி குளம் முறிப்பு பகுதியில் அமைந்துள்ளது இதனை முறிப்பு குளம் என்று எல்லோராலும் பேசப்பட்டு வந்துள்ளது.
இந்த குளத்தின் அலகரைப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வாளர்களால் தொடர்ச்சியாக மணல் அகழ்வு பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
இவ்வாறு மணல் அகழ்வதால் குளத்தின் அலகரை பகுதியில் பாரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் போக்வுரத்து செய்யமுடியாத நிலையில் வீதிகளும் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு தொடருமாக இருந்தால் குளத்திற்கும் வீதிக்கும் பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் மணல் அகழ்வாளர்கள் தொடர்ச்சியாக மணல்அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள்
இதனை முள்ளியவளை பொலீசார் கண்டுகொள்ளதா நிலை காணப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்துடன் இவ்வாறான சம்பவத்தினை உரிய திணைக்கள அதிகாரிகள் கவனத்தில் எடுதி;து உடன் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.