சிவனை  வணங்ககூட உரிமை இல்லாத நாடாக இலங்கை!

சிவனை  வணங்ககூட உரிமை இல்லாத நாடாக இலங்கை இருக்கின்றது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று(08) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து சர்வதேச மகளீர்தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் முன்னெடுத்துவரும் தொடர்போராட்டத்தின் 2209 ஆவது நாளினை முன்னிட்டும் முல்லைத்தீவு நகர சுற்றுவட்ட பாதையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள் நீதிக்கான போராட்டம் தொடரும் என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 55 ஆவது ஜ.நா மனித உரிமை கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் அங்கும் எங்களின் உரிமைகள் இலங்கை அரசாங்கத்தின் அடக்கு முறைகள் தொடர்பில் வெளிக்கொண்டுவரப்பட்ட நிலையில் தாயத்திலும் நாங்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்

ஒ.எம்.பிஅலுவலகம் நாங்கள் வேண்டாம் என்று எதிர்த்து போராடி வந்தாலும் தற்போது மாவட்டசெயலகம் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக கடிதம் அனுப்பி அவர்களை வாகனம் விட்டு ஏற்றி பதிவுகளை மேற்கொண்டு சர்வதேசத்தினை ஏமாற்றி வருகின்றார்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தினை இல்லாமல் ஒழிப்பதற்கு அரசுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றார்கள் தற்போது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்று ஜனாதிபதி கொண்டுவந்துள்ளார் ஒவ்வொரு சட்டங்களையும் கொண்டுவந்து தமிழ்மக்களை அடக்க முறைக்குள் உள்ளாக்கிவருகின்றார்கள்.

இன்று புதிய சட்டத்தினை பயன்படுத்தி வெடுக்குறாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியினை கைதுசெய்திருக்கின்றார்கள் சைவ தலத்தில் சிவராத்திரியில் சிவனைக்கூட அனுஸ்டிக்கமுடியாத உரிiமையினை கூட இல்லாதா நாடாகத்தான் இருக்கின்றது வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் வாழமுடியாத நிலைக்கு தமிழ்மக்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை சர்வதேசம் சற்று உணர்ந்து எமது தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ வழிசெய்யவேண்டும் 

Admin Avatar