வடக்கு கிழக்கு பகுதிகளில் மத ஆக்கிரமிப்புக்கள் குறித்து ஜக்கியநாடுள் சபையின் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் கவனத்திற்கு 06.03.2024 அன்று கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து சென்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் சார்பில் கலந்துகொண்ட கணபதி பிரசாந் வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மத ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் அறிக்கையிட்டுள்ளார்.
குறிப்பாக இலங்கையில் பௌத்த ஆக்கிரமிப்பும் அதன் அதிகாரமும்தான் காணப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை, நீராவியடிப்பிள்ளையர் ஆலயத்தின் இடம்பெற்ற பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவினைமீறியும் குருந்தூர்மலையில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு விகாரை என்பன இலங்கையில் பௌத்த மேலாதிக்கத்தினை எடுத்துகாகட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.