மாந்தை கிழக்கு விவசாய குழு கூட்டம்!

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் யுத்தத்திற்கு பின்னர் முதன் முதலாக விவசாய குழு கூட்டம்!மாந்தை கிழக்கு பிரதேசத்தின் 2024 ஆம் ஆண்டின் 1வது காலாண்டுக்கான பிரதேச விவசாயக்குழுக் கூட்டம் 27.02.2024 செவ்வாய் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது

மாந்தை கிழக்கு பதில் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது தற்போது வடக்கில் அறுவடை நடவடிக்கைகள் முடிவடைவை நெருங்கியுள்ள போதிலும் சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன

இதேவேளை தற்போது பெரும்போக அறுவடை நடவடிக்கையில் நெற்கதிர்களுக்கு ஏற்படடிருந்த தத்தி தாக்கங்கள் மற்றும் கபில நிற தாக்கங்கள், எரிபந்த தாக்கம் உள்ளிட்டவை பரவலாக முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் பல கிராமங்களை தாக்கியிருந்தது

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவை பிரிவு மற்றும் பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட பிரிவுகள் பெரிதும் மேற்குறித்த தாக்கங்களினால் பாரிய அழிவை சந்தித்திருந்தன

குறிப்பாக துணுக்காயின் கோட்டைகட்டியகுளம், தென்னியங்குளம், கல்விளான், ஜயங்குளம் புத்துவெட்டுவான் போன்ற பகுதிகளிலும், மாந்தை கிழக்கு கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் , செல்வபுரம் , நட்டாங்கண்டல், விநாயகர்புரம் ஒட்டறுத்தகுளம் ,சிராட்டிகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நோயின் தாக்கம் அதிகளவில் கடந்த பெரும்போக நெற்செய்கையில் தாக்கம் செலுத்தப்பட்டிருந்தது

குறித்த நிகழ்வில்திருநெல்வேலி விவசாய ஆராய்சி திணைக்கள உதவி விவசாய பணிப்பாளர் திரு S.ராஜேஷ்கண்ணா கலந்து கொண்டு நெற்செய்கையில் ஏற்படடுள்ள நோய்த்தாக்கங்கள் உள்ளிட்ட தாக்கங்களுக்கு எந்தவகையான மருந்துகளை பாவிக்கலாம் என்பது தொடர்பிலும், வளவளாவி இருந்தார்

பிரதேச செயலாளர் திரு . இராமதாஸ் ரமேஸ் தலைமையில் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள். கமக்கார அமைப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், பாண்டியன்குளம் பிரதேச விவசாய போதனாசிரியர்கள், பிரதேச சபை செயலாளர் , கிராம மட்ட விவசாய அமைப்பினர் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்

யுத்தத்திற்கு பின்னர் 16 வருடங்களுக்கு பின்னர் குறித்த விவசாய குழு கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Admin Avatar