முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்பட்டதால் அதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் நிலையினை முல்லைத்தீவு மாவட்ட ஊடக வியலாளர் சண்முகம் தவசீலன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அந்த மக்களின் நிலையினை வெளியில் கொண்டுவந்துள்ளார்கள்.
ஊடக வியலாளர்களின் அளப்பரிய இந்த பணி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சென்றடைந்துள்ளது.
தேராவில் குளத்தினால் பாதிக்கப்பட்ட 17 குடும்பங்களின் நிலைகளையும் நேரில் சென்று அவர்களின் வீடுகள் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையினை வெளிக்கொண்டுவந்த ஊடக வியலாளர்களின் இந்த செயற்பாட்டின் ஊடாகவேதான் தேராவில் குள வெள்ள அனர்த்த வேலைத்திட்டத்திற்கு லைக்காநிறுவனம் முன்வந்துள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களின் தொடர்பு ஊடாக இந்த குளத்தின் வெள்ள அனர்த்த வேலைதிட்டத்தினை மேற்கொள்ள லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளமையானது ஊடகவியலாளர்களின் இவ்வாறான பணிகள் பெருமைகொள்ள வைக்கின்றது என்று முல்லைத்தீவு மாவட்டஅரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் லைக்கா நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளரும் முன்னாள் அரசாங்க அதிபருமான சு.அருமைநாயகம் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.