Monday, April 28, 2025
HomeUncategorizedமண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேர் கைது!

மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேர் கைது!

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் நேற்றையதினம் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து வாகனங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று (22.02.2024) இரவு 6.50 மணியளவில் புதுமாத்தளன்  பகுதியிலுள்ள வீட்டுகாணி ஒன்றில் 4 பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் குழுவினர் புதையல் தோண்டிய 4பேரையும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து வைகோ இயந்திரம், டிப்பர் ரக வாகனம்,  என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த இருவரும், ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த ஒருவரும், கைவேலி பகுதியை சேர்ந்த ஒருவருமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 45,42,31,30 வயதுடையவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments