அளம்பில் றோ.க.மகாவித்தியாலய மாணவர்களின் வீதி ஓட்டப்போட்டி!

அளம்பில் றோ.க.மகாவித்தியாலய மாணவர்களின் வீதி ஓட்டப்போட்டி!

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு முல்லைத்தீவு அளம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியால மாணவ மாணவிகளுக்கிடையிலான வீதி ஓட்டப்போட்டி 23.02.024 இன்று நடைபெற்றுள்ளது.

பாடசாலை முதல்வர் திரு.முகுந்தன் தலைமையில் குமுழமுனையினை பிறப்பிடமாக்கொண்டு கனடாவில் வசித்து வருகின்ற திருவாளர் சூகந்தசாமிபத்மநாதன் அவர்களின் முற்றுமுழுதான நிதியனுசரனையில் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

ஆண்களுக்கான போட்டியானது சிலாவத்தை சந்தியில் ஆரம்பமாகி பாடசாலைக்கு முன்பதாக நிறைவுபெற்றுள்ளதுபோட்டியினை முல்லை வலய உடற்கல்வி ஆலோசகர் திரு.கோரஸ் டிலான் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்

அத்துடன் பெண்களுக்கான போட்டியானது உடுப்புக்குளம் சுவாமி தோட்டம் முன்பதாக ஆரம்பமாகி பாடசாலையில் நிறைவுற்றதுடன் இப்போட்டியினை பாடசாலையில் முன்னைநாள் முதல்வர் திரு.அல்பிரட் ஐயா  அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

ஆண்களுக்கான போட்டியில் முதலிடத்தினை விமலராசா வினுஸ்ரன் அவர்களும் இரண்டாமிடத்தினை பிரபாகரன் கர்ஜியன் அவர்களும் மூன்றாமிடத்தினை சிறிகாந்கௌசிகன் அவர்களும் தங்கள் வசப்படுத்தியதுடன்

பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தினை நிசங்கறூபன் ஜஸ்மின்ராகவி அவர்களும் இரண்டாமிடத்தினை லெனின்நெல்சன் வினோயினி அவர்களும் மூன்றாமிடத்தினை சூரியகுமார் விதுசா அவர்களும் பிடித்துள்ளார்கள்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ,முன்னைநாள் அதிபர் , ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து போட்டியில் பங்குகொண்ட வீர வீராங்கனைகளுக்கு  உற்சாகத்தினையும் ஆதரவினையும் வழங்கியதுடன் போட்டிக்கான மருந்துவ உதவியினை அளம்பில் ஆதார வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினர் வழங்கியுதவியதுடன்  

களைப்புற்று வருகின்ற வீர வீராங்கனைளுக்கான தண்ணீர் வசதியினை விசேட ஏற்பாட்டில்  உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டுக்கழகத்தினரும் மற்றும் அளம்பில் 24 வது சிங்க இராணுவ படை முகாமினரும் வழங்கியுதவியதுடன்  போட்டியில் ஏராளமான வீர வீராங்கனைகள் உற்சாகத்துடன் பங்குபற்றி நிறைவு செய்துள்ளார்கள்.

Admin Avatar