வி.புலிகளின் தங்கத்தை தேடி முக்கிய கருவிகளுடன்!

வி.புலிகளின் தங்கத்தை தேடி முக்கிய கருவிகளுடன்!

தருமபுரம் பொலிஸ் நிலையத்தால் 2024.02.16ம் திகதியன்று கிளிநொச்சி வழக்கு இலக்கம்: AR02/24 வீழ் தரமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ளஇடம் தனியாருக்குச் சொந்தமான கானியோன்றில் LTTE அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

தர்மபுரம் பெலிசாரினால் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு மன்று திருப்தியடைந்தமையால் 202402.19 திகதியன்று பகல் 14:30 மணியளவில் குறித்த தருமபுரம் பொலிசாரால் குறிப்பிடப்பட்ட இடத்தில் அகழ்வுநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது பிரேதச தலைவர்கள் மற்றும் மதகுருமார்கள் கிராம சேவையாளர் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் பங்குபற்றினர் குறித்தஅகழ்வின் போது தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையில் அகல்வு நடைபெற்றது

குறித்த அகழ்வில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஸ்மாட்ஜெமில் மற்றும் தொல்பொருள் தினைக்கலம் சிறப்பு அதிரடிபடையினர் இராணுவத்தினர் கிளிநொச்சி பிரதி பொலிஸ் சமரக்கோன் அவர்கள் முன்நிலையில் அகழ்வு நடைபெற்றது

குறித்த அகழ்வு 3 அடிக்கு மேல் அகலப்பட்ட நிலையிலும் எந்தவித தடயமும் எட்டப்படாத நிலையில் தகவல் வழங்கப்பட்டவரின் தகவலுக்கு அமைவாக நாளைய இன்றும் 20.02.2024 அதே பகுதியில் நீதவான் உத்தரவுக்கமைவாகஅகழ்வு பணிகள் நடைபெற உள்ளதாக தருமபுரபோலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்
நேற்றைய அகள்வின் இறுதியில் மூன்று அடிவரை தோண்டப்பட்டபோது ராணுவத்தினரின் முக்கிய கருவி கொண்டு நிலத்தில் சோதனை நடத்தியுள்ளார்கள்.

Admin Avatar