முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள சுண்ணாப்பு சூளைவீதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி பிரதேச செயலக மட்டத்தில் மாற்றி அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று 19.02.2024 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு கிராமத்திற்கான வீதிக்கு ஒதுக்கப்பட்ட நீதியினை ஏன் மற்றி அமைத்துள்ளீர்கள் என்ற கேள்வியினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் முன்வைத்துள்ளார்கள்.
இதற்கு பதில் அளித்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட பதீட்டு திட்டத்தில் 22.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள 7 வட்டாரங்களுக்கும் சனத்தொகை அடிப்படையில் பரப்பளவு அடிப்படையில் அபிவிருத்திக்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடித்தான் அவர்களின் தேவைகளை தெரிவு செய்தார்கள்.
அவ்வாறு தெரிவு செய்த அபிவிருத்தி பணிகள் இது மட்டுமல்ல இன்னும் பல வேறு காரணங்களால் அதாவது ஒதுக்கப்பட்ட நிதி போதாது போன்ற காரணங்களால் மாற்றவேண்டியிருந்தது சுண்ணாப்புசூளை வீதியினை பல ஆண்டுகளாக புனரமைக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.
கடந்த காலத்திலும் குறித்த வீதி பிரதேச சபையினால் புனரமைக்க முயன்றபோது போதியளவு நிதி இல்லாமல் கைவிடப்பட்டிருந்தது அந்த வீதி இந்த முறை புனரமைப்பு செய்யப்படவேண்டும் என பொதுமக்கள் விரும்பி இருந்தான் வெளிப்பாடாகவே மக்கள் கூடியுள்ளார்கள்.
மக்களின் ஆதங்க்தினை புரிந்து கொள்கின்றேன் அதற்கேற்றவகையில் நான் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தி அவரின் உதவியுடன் வீதியினை திருத்தி தருவேன் என்றும் மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.