இலங்கை சாரணர் சங்கத்தின் 10 வது ஜம்போறி மாநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 75 மாணவர்கள் பங்கேற்ப்பு
இலங்கை சாரணர் சங்கத்தின் 10 ஆவது ஜம்போறி மாநாடு திருகோணமலையில் நாளை 21ஆம் திகதி ஆரம்பித்து 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 75 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
குறித்த 10 வது தேசிய ஜம்போரியில் பங்கேற்க இருக்கும் முல்லைத்தீவு சாரணர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறை மாவட்டஆணையாளர், மாவட்ட சாரணர் சங்க செயளாலர், உதவி மாவட்ட ஆணையாளர்கள் ,மாவட்ட இணைப்பாளர், சாரணதலைவர்கள், பங்கேற்புடன் வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றுள்ளது
இதனைத்தொடர்ந்து குறித்த 75 சாரண மாணவர்களும் இன்று காலை திருகோணமலை நோக்கி பயணமாகியுள்ளனர் குறித்த பங்கேற்ப்பாளர்களில் 13 பெண் சாரணர்களும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது