புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை -மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு
முல்லைத்தீவு-புதுக் குடியிருப்பு ஆதார வைத்தி யசாலையில் வைத்தியர்க ளுக்கு பற்றாக்குறை நிலவுவ தாக, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட் டத்தில் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது.
மேற்படி மாவட்ட ஒருங் கிணைப்புக் குழுக்கூட்டம் வெள்ளிக் கிழமை 16-02-24 இடம்பெற்றபோ தே,குறித்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது.
குறிப்பாக எட்டு வைத்தி யர்கள் பணியாற்ற வேண்டிய புதுக்குடியிருப்பு ஆதாரவைத் தியசாலையில், தற்போது நான்கு வைத்தியர்கள் மட் டுமே பணியாற்றி வருவதா கத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பரக நாளொன்றிற்கு
80 முதல் 100 நோயாளர் கள் வரை பயன்பெறும் மாங்குளம் ஆதார வைத்தி யசாலைக்கு எட்டு வைத்தி யர்கள் நியமிக்கப்பட்டுள்ள துடன்,தினமும் 300 முதல் 350 வரையான நோயாளர் கள் பயன்பெறும் புதுக்கு டியிருப்பு ஆதார வைத்திய சாலையில் வெறும் நான்கு வைத்தியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக, இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது . எனவே அதிகளவு மக்கள் வாழ்ந்துவரும் புதுக்கு டியிருப்புப் பகுதியிலுள்ள ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறையை விரைவில் பூர்த்திசெய்து தரு மாறு மேற்படி கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது