நிரந்தர யானை வேலி அமைத்துத் தருக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை!

முல்லைத்தீவு பழம்பாசி மற்றும் மணவாளன்பட்ட முறிப்பு கிராமங்களுக்குள் நிரந்தரமாகவே யானைகள் வருவதை தடுப்பதற்கு யானை வேலி அமைத்துத் தருமாறு ஒட்டுசுட்டான் பிர தேச செயலாளரிடம் மேற் படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணவாளன்பட்டமுறிப்பு கிராமத்தில் சுமார் 400 வரையான குடும்பங்களும் பழம்பாசி கிராமத்தில் 390 வரையான குடும்பங்களும் வாழ்கின்றன. தற்போது காலபோக நெற்செய்கை முடிவடைந்ததையடுத்து கமநல சேவை நிலையங் களினால் அமைக்கப்பட்ட தற்காலிக யானை வேலிகள் கழற்றப்பட்டுள்ளது.இதன் காரணமாக கூட்டம் கூட் மாக வயல்களுக்கு வரும்

யானைகள் குடியிருப்புகளுக் குள் புகுவதால் தென்னை. வாழை போன்ற பயன்தரு மரங்கள் அழிக்கப்படுகின்றன.அத்துடன் இரவு வேளைகளில் மேற்படி கிராம மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.

எனவே, பயிர்ச் செய்கை காலங்களில் மட்டுமல்லாது நிரந்தரமாகவே கிராமங்க ளுக்குள் யானை வராமல் தடுக்க யானை வேலிகளை அமைத்துத் தருமாறு ஒட்டு சுட்டான் பிரதேச செயலாள ரிடம் மேற்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதேவேளை யானைகளின் வருகைகளினால் பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள தாக குறித்த இரு கிராமங்க ளின் மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்

Admin Avatar