முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் குளம் நீர் நிரம்பி காணப்படுவதால் அதனை வெளியேற்றுவதற்கான நிதி உதவியினை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க லைக்காக ஞானம் பவுண்டேசன் முன்வந்துள்ளது.
உலகத்தில் தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இன்று தென்னிந்தியா சினிமாவில் பாரிய முதலீட்டினை மேற்கொள்ளும் நிறுவனமான லைக்கா நிறுவனம் காணப்படுகின்றது.
இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் லைக்கா நிறுவனம் மக்களுக்கான அபிவிருத்திபணிகள் மற்றும் சேவைகளை வழங்கிவருகின்றது
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்தவர் இவருக்கு இந்த மக்களின் பிரச்சினை தெரியப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து
மக்களின் பிரச்சினையினை தீர்ப்பதற்கு லைக்கா ஞானம் பவுண்டேசன் முன்வந்துள்ளது.
இதேவேளை அதன் முதற்கட்டமாக இந்த குளத்து நீரினால் பதிக்கப்பட்ட 17 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நிவாரபொருட்கள் வழங்கும் நிகழ்வு உடையார்கட்டு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில்நடைபெற்றுள்ளது இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாhமகேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதெச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்,கிராம சேவையாளர்கள் லைக்கா ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தின் உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மக்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்துள்ளார்கள்.