Sunday, April 27, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் மூடப்பட்ட பாடசாலையினை மீளஇயக்க நடவடிக்கை-காதர் மஸ்தான்!

முல்லைத்தீவில் மூடப்பட்ட பாடசாலையினை மீளஇயக்க நடவடிக்கை-காதர் மஸ்தான்!

மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் (15) மாந்தை கிழக்கின் பிரதேச செயலகத்தில் பிற்பகல் 12.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கௌரவ இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

மாந்தை கிழக்கின் பிரதேச செயலாளர் திரு இராமதாஸ் ரமேஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 

மாந்தை கிழக்கு பிரதேசத்தின் முக்கிய விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

குறித்த நிகழ்வில் விவசாயம் ,காணி, வனவளத் திணைக்களம் , நன்னீர் மீன்பிடி , தொடர்பான பிரச்சினைகள் முதன்மையாக கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 

பாண்டியன்குளம் பாடசாலையில் உயர்தர சகல  பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறு    பிரதேச அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நாளைய தினம் இடம்பெறும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தெரிவித்தார் 

மேலும் மூடப்பட்டுள்ள மாந்தை கிழக்கின் பூவரசங்குளம் அரசினர் தமிழ கலவன் பாடசாலையினை  மீள இயங்க நடவடிக்கை எடுக்குமாறு  பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு  நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தெரிவித்திருந்தார் 

மேலும் வீதி அபிவிருத்திகள், பயிர் அழிவுகள் தொடர்பாகவும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments