Sunday, April 27, 2025
HomeUncategorizedமாபெரும் கிளித்தட்டு போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

மாபெரும் கிளித்தட்டு போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

வணங்காமண் மறுவாழ்வுக் கழகம்  பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிளித்தட்டு போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன 

கிளித்தட்டு வரலாற்றில் முதல் முறையாக வணங்காமண் மறுவாழ்வுக் கழகம்  பெருமையுடன் நடாத்தும் மாபெரும் “வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024” கிளித்தட்டு சுற்றுப் போட்டிகள்  மாசி மாதம் 23,24,25 ம் திகதிகளில் நெடுங்கேணி 17ம் கட்டை துர்க்கா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது 

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட சகல கிளித்தட்டு அணிகளையும் ஒரு களத்தில் ஒருங்கிணைக்கும் மாபெரும் சுற்றுப்போட்டியாக இடம்பெறும் இந்த போட்டியில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் 20.02.2024 க்கு முன்னர் தங்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

பதிவுள்ள, பதிவற்ற கழகங்கள் மற்றும் அணிகள் விண்ணப்பி்க்க முடியும்.

ஒரு கிராமாசேவையாளர் பிரிவில் இருந்து அதிகபட்சமாக மூன்று அணிகள் வரை கலந்துகொள்ள முடியும்.

15 வயது தொடக்கம் 46 வயது வரை உள்ள கிளித்தட்டு விளையாட்டிற்கு உகந்த உடல் ஆரோக்கியம் உடைய ஆண்களை அணி வீரர்களாக உள்வாங்க வேணடும்.

ஒரு அணியில் 6 பிரதான வீரர்களுடன் 4 மேலதிக வீரர்கள் உள்ளடங்களாக 10 வீரர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களே ஏற்றுக்கொள்ளப்படும்.

கழகங்களின் பெயர் தமிழ்ப் பெயராக இருத்தல் கட்டாயமானதாகும். வேறு மொழிச் சொற்கள் கழகங்களின் பெயர்களாக  காணப்படும் பட்சத்தில் குறித்த அணி எக்கிராமத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபெற வருகின்றதோ அக்கிராமத்தி்ன் பெயரே அணியின் பெயராக கொள்ளப்படும்.

எக்கிராமத்தை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த அணி விண்ணப்பிக்கின்றதோ அவ்வணியின் அனைத்து வீரர்களும் குறித்த கிராமம் உள்ள கிராமசேவையாளர் பிரிவில் பதிவுள்ளவர்களாக இருத்தல் கட்டாயமானதாகும்.

பதிவுக்கட்டணம், நுழைவுக்கடடணங்கள் என்று எதுவித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது.

விண்ணப்பப்படிவங்களை உங்களது பிரதேசசெயலகப்பிரிவின் விளையாட்டு உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது 077 760 5714 , 077 877 9565 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும்  20-02-2024 ஆம் திகதிக்கு முன் 077 877 9565 என்ற வட்ஸ்ஸப் (What’s app) இலக்கத்திற்கு தெளிவான நிழற்படமாக அனுப்பி வைக்குமாறும் ஏற்ப்பாட்டாளர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர் அத்தோடு 

https://drive.google.com/drive/folders/1–w_DxDAqeBAXBPH1Swqsm3bWM1B9_rE  எனும் இந்த முகவரியில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்தும் அனுப்ப முடியும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments