Sunday, April 27, 2025
HomeUncategorizedசிறுபோக பயிர்செய்கைக்கான நீர் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது!

சிறுபோக பயிர்செய்கைக்கான நீர் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்துஜயன் கட்டுகுளத்தில் இம்முறை போதியளவு நீர் சேமிக்கப்பட்டுள்ளதால்  குளத்தின் கீழான விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

இந்த நிலையில் சிறுபோக பயிர்செய்கைக்கான பொதுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்று நீர்வழங்குவதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டு 16.02.20224 குளத்தின் நீர் விவசாய செய்கைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

இன்று திறந்துவிடப்படும் நீர் எதிர்வரும் 31.08.2024 அன்று பூட்டப்படவுள்ளது.உப உணவு செய்கையாளர்களுக்கும் நீர் இறைக்கும் இயந்திரங்கள்மூலம் நீரினை பெற்றுக்கொள்ள இம்முறை வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கீழ் 4522 ஏக்கரில் இம்முறை விவாசய செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதில் நெல்பயிர் செய்கைக்காக 3684 ஏக்கரும் உப உணவு பயிர்செய்கைக்காக 828 ஏக்கரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வேலியுடன் பயிர்செய்கையும் கால்நடையுடன் ஆட்களும் பராமரிப்பு என்ற அடிப்படையில் சிறுபோக செய்கையினை விவசாயிகள் மேற்கொள்ளவுள்ளார்கள்குளத்திற்கான நீர் திறந்துவிடும் நிகழ்வு கமக்கரா அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குளக்கட்டுபிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் பொங்கி பூசை வழிபாடுகளை தொடர்ந்து குளத்திக்கொட்டில் நடைபெற்ற வழிபாட்டுகளுடன் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முத்துஜயன் கட்டு நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் திருமதி மஞ்சுளா யொய்ஸ்குமார் அவர்களும் திட்ட பிரிவு உதவியாளர் வி.றாஜகாந்தன் அவர்களும் கலந்து கொண்டுள்ளதுடன் விவசாயிகள் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments