Tuesday, April 29, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் ஏமாற்றப்பட்ட மக்கள் !

முல்லைத்தீவில் ஏமாற்றப்பட்ட மக்கள் !

முல்லைதீவில் அனாமதேய கடிதத்தால் அலைக்கழிக்கப்பட்ட மக்கள்!

முல்லைதீவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் அப்பால் உள்ள கனகராயன்குளம் மற்றும் அதனை ஆண்டிய ஏனைய பிரதேச மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு அனாமதேய கடிதத்தால் அந்த மக்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.


நயினாமடு ராசபுரம் கனகராயன் குளம் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் என்ற தலைப்பிட்டு நிவாரணம் வழங்குவதற்கான கலந்துரையாடல் சம்பந்தமாக 10 -02- 2024 அன்று மாவட்ட செயலகத்திற்கு வருகை தரும் ஆறு நிவாரணம் வழங்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாகவும் பிழையான தமிழ் எழுத்துக்களால் பலரது மக்களின் பெயர் முகவரிகள் குறிப்பிட்டு 50 ரூபா முத்திரை ஒட்டப்பட்ட கடிதம் தபால் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் குறிப்பிட்டதற்கு அமைய பல மக்கள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்றுள்ளார்கள் அங்கு சென்று அதிகாரிகளை தொடர்பு கொண்டு கடிதத்தினை காட்டி கேட்டபோது இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்
எனவே இவ்வாறு பல மக்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments