Tuesday, April 29, 2025
HomeUncategorizedமுல்லை யேசுதாஸ் அவர்களின் 4 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு!

முல்லை யேசுதாஸ் அவர்களின் 4 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு!

மறைந்த பல்துறை கலைஞர் முல்லை யேசுதாஸ் அவர்களின் 4 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மறைந்த பல்துறைக்கலைஞரும் திரைப்பட இயக்குனரும்,எழுத்தாளரும்,மாமனிதரும் ஆன முல்லை ஜேசுதான் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்புற நினைவுகூரப்பட்டுள்ளது.

07.02.2024 அன்று முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இந்த வணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது
பழந் தமிழர் பாசறையினரின் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மறைந்த முல்லை ஜேசுதாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது முல்லை ஜேசுதாஸ் அவர்கள் தொடர்பிலான நினைவுரைகளும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தாயக மண்ணில் தமிழர்களின் கலை கலாச்சாரத்தினை கட்டி வளர்க்க கலைஊடாக அளப்பரும் பணியாற்றி மறைந்த கலைஞர்களை நினைவுகூர அவர்களின் நினைவுளை தாய தேசத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ளவர்கள் அறிந்து அவர்களை நினைவுர முன்வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments