இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் – முல்லைத்தீவு கிளையின் ஏற்பாட்டில்; கடந்த (04.02.2024) முல்லைத்தீவு மாவட்;ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னாகணடல் வசந்தபுரம் மற்றும் கெருடமடு கிராமத்தில் வசிப்பவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இந்த கிராடமக்கள் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழைவெள்ளத்தினால் மூழ்கியுள்ளன பல மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள் இந்த மக்களின் கிணறுகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது இந்த நிலையில் கிராமத்தில் உள்ள மக்களின் சுகாதார தேவையினை பூர்த்திசெய்யும் நோக்கில் மருந்து சுகாதார ஆலோசனை முதலுதவி மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பல சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்தார்கள்.
செஞ்சிலுவை சங்கத்தினால் அண்மைய வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியத்தினூடாக பல்வேறுவகையான நிவாரண செயற்பாடுள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மடடுமல்லாது 07 மாவட்டங்களில் மேற்கொள்ளபட்டுவருவது குறிப்பிடதக்கது.
