Thursday, May 1, 2025
HomeUncategorizedதனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் என லண்டனில் இருந்துகோரிக்கை!

தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் என லண்டனில் இருந்துகோரிக்கை!

வேலுப்பிள்ளை மாதவமேஜர் ஆகியநான் எதிர் வரும் இலங்கையின் சுதந்திர தினத்தினை குழப்புவதற்கு கூறி முல்லைத்தீவு மாவட்டம். புதுக்குடியிருப்பில் உள்ள எனது வீட்டிற்கு 01.02.2024 அன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சென்று எனது அம்மா மற்றும் சகோதரியிடம் பலகோணங்களில் விசாரணைகள் செய்து மிரட்டியும் உள்ளார்கள்.

எனது அம்மா இருதய நோயாளி அவரை இவர்கள் இவ்வாறு மிரட்டுவதால் அவர்களது உயிருக்கு ஆபத்தாகிடுமோ என்ற அச்சமும் எனக்குள் எழுகின்றது.

நாட்டில் எனது பாதுகாப்பு கேள்விக்குறியானதன் காரணமாக நான் புலம்பெயர் தேசத்தில் அகதியாக உள்ளேன். தற்போது எனது குடும்பத்தினர் அடக்குமுறைக்குள் உள்ளதால் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

நான் ஒருபோதும் நாட்டுக்கோ நாட்டுமக்களுக்கோ விரோதமானவனும் அல்ல விரோதமாகவும் செயற்படவும் மாட்டேன் என்பதையும் உறுதியாக கூறுவதுடன். இவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி எனது குடும்ப உறுப்பினர்களை இடையூறு செய்யவேண்டாம் என இலங்கை அரசுக்கும். அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கும் படியும் ஊடகதுறையிடம் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.
வே.மாதவமேஜர்.
03.02.2024. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments