உடையார் கட்டு குளத்தின் கீழ் நெல் அறுவடையில் வீழ்ச்சி விவசாயிகள் விசனம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குளத்தின் கீழ் 1556 ஹெட்டரில் 2023 ஆம் ஆண்டுக்கான கால போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றார்கள்.

உடையார் கட்டு கமநல சேவை திணைக்களத்தின் கீழ் நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சியினை கண்டுள்ளதுடன் தற்போது தனியார் அறாவிலைக்கு நெல்லினை கொள்வனவு செய்துவருவதால் விவசாய செய்கை நட்டப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது 

இவ்வாறு ஏக்கருக்கு காடந்த காலத்தில் 25 பை நெல் வெட்டி எடுத்த நிலையில் இந்த முறை 10 தொடக்கம் 15 வரையான பை நெல்லே கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

கடந்த முறையினை விட ஒன்றரை மடங்கு அறுவடையில் வீழ்ச்சி
மானிய பசளை இருந்தால் விசயாம் செய்தார்கள் இந்த முறை பசளைக்கு பதிலாக பணம் என்று சொல்லி 6 ஆயிரம் போட்டுள்ளார்கள் நாங்கள் 3ஆயிரம் போட்டுதான்  பசளை 9 ஆயிரம் ரூபாவிற்கு எடுக்கவேண்டிய நிலை உரங்களுக்கான அதிக விலை களைநாசினிகளுக்கான விலை மூன்று மூடை நெல்லு வித்தாலும் ஒரு களைநாசினி வாங்கமுடியாது (லோயன் என்ற களை நாசினியின் விலை33 ஆயிரம் ரூபா லீற்றர்) டீசல் விலை ஏற்றத்தினால் வெட்டு மிசின் கூலி 17 ஆயிரம் வரை எடுக்கின்றார்கள். முன்னர் 8 ஆயிரம் ரூபா வரை போனது

வங்கியில் கடன் எடுத்து கட்ட முடியாத நிலை ஒவ்வொரு முறையும் தவணை சொல்லி சொல்லி காலம் கடந்து கொண்டு செல்கின்றது அரசாங்கம் மானிய பசளை என்றாலும் தரவேண்டும் நெல்லுக்கான நிதந்தர விலை இல்லை நாங்கள் வெட்டி இரண்டு மாதம் கழித்துதான் விலையினை அறிவிப்பார்கள்

இப்போது 8ஆயிரம் விற்க வேண்டிய நெல்லினை 5 ஆயிரத்திற்கு கொடுக்கின்றோம் தற்போது விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் கையால்தான் பணத்தினை செலவு செய்து ஒன்றும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பசளை,மருந்து என அதிகவிலைக்கு வாங்கி வாங்கிய கடனினை கட்டமுடியாத கட்டத்தில் நாங்கள் மருந்து குடித்தோ சாகவேண்டிய கட்ட்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் இதற்கு அரசாங்கம் விவசாய அமைச்சு நட்ட ஈட்டினை தந்து விலையினை குறைத்து தரவேண்டும்,முக்கியமாக எரிபொருள்,பசளை ,மருந்துக்கான விலையினை குறைக்கவேண்டும் நெல்லுக்கான விலையினை நிர்ணயிக்கவேண்டும்.

காப்புறுதி என்று விவசாயிகளுக்கு வாய்மூலம் தான் தான் இருக்கின்றது உரிய இழப்பீடு தரப்படவில்லை இவ்வாறு தொடர்ந்து செல்லுமாக இருந்தால் நாங்கள் விவசாயத்தினை கைவிட்டு நாங்களும் கூலிக்கு போகவேண்டி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இன்று மூன்று நாலு கூலிஆட்கள் வைத்து செய்யவேண்டிய வேலையினை இரண்டு ஒருபேருடன் வைத்து செய்யவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

Tagged in :

Admin Avatar

More for you