Saturday, May 10, 2025
HomeUncategorizedஇலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முல்லைத்தீவு - 2024 க்கான வருடாந்த ஒன்றுகூடல்!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முல்லைத்தீவு – 2024 க்கான வருடாந்த ஒன்றுகூடல்!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் 2024 க்கான வருடாந்த ஒன்றுகூடல்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் 2024 க்கான வருடாந்த ஒன்றுகூடல் அண்மையில்  கிளை மாநாட்டு மண்டபத்தில் கௌரவ கிளைத் தலைவர் Dr. க.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கௌரவ தலைவர் திரு.கே.பாலகிருஷ்ணன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் தங்களின் அர்ப்பணிப்பான மனிதாபிமான சேவைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். கனகம்மா அறக்கட்டளை (UK) உடன் இணைந்து முல்லைத்தீவு கிளையின் புதிய முயற்சியாக பொருளாதாரத்தில் பின் தங்கிய பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அயலிலுள்ள SLRCS மாவட்டக் கிளைத் தலைவர்கள், SLRCS முல்லைத்தீவுக் கிளை, பிரதேச ஆளுநர் சபை உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments