Sunday, May 11, 2025
HomeUncategorizedஉடையார் கட்டு முருகன் ஆலயத்தில் -தைபூச பூசை வழிபாடுகள்!

உடையார் கட்டு முருகன் ஆலயத்தில் -தைபூச பூசை வழிபாடுகள்!

முல்லைத்தீவு உடையார் கட்டு முருகன் ஆலயத்தில் சிறப்புற நடைபெற்ற தைபூச பூசை வழிபாடுகள்

புதுக்குடியிருப்பின் உடையார்கட்டு பகுதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் முருகன் ஆலயத்தில் தைப்பூச நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.

தைபூச திருநாளான இன்று 25.01.2024 உடையார்கட்டு முருகன் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க உபயதாரர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தின் பக்த்தர்கள் குருக்களுடன் உடையார்கட்டு குளக்கட்டு வயல் வெளிக்கு சென்று அங்கு வயலில் பூசை வழிபாடுகளுடன் புதிர் வெட்டப்பட்டு உடையார் கட்டு குளக்கட்டு பிள்ளையார் ஆலயத்தில் வைத்து பூசை வழிபாடுகளை தொடர்ந்து 

புதிர் எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் வைத்து முருகனுக்கு சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு புதிர் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்றைய நன்நாளில் ஆலயத்தில் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டிவைக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments