இலங்கை இன்று அந்நிய சக்திகளின் கையுக்குள் அகப்பட்டு இருக்கின்றது இந்தியாவின் கையிற்குள்ளும் இல்லை சிங்களவர்ளின் தலைமைத்துவமும் பறிக்கப்பட்டு சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தின் இந்த நாடு கொண்டுசெல்லப்படும் என்பதை நாங்கள் உறுதியாக சொல்கின்றோம் என்று இன்று 08.01.2024 அன்று முல்லைத்தீவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்துள்ளார்
அண்மையில் வடக்கிற்கு ஜனாதிபதியின் வருகை தொடர்பிலும் இதன்போது தெரிவித்த இ.கதிர்.
எமது நாட்டின் ஜனாதிபதியாக வருகைதந்துள்ளார் உண்மையா வடமாகாணத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து முக்கியமானவர்களை சந்தித்திருக்கின்றார் இதன்போது எமது பிரச்சினைகள் தொடர்பாக காலத்தினை இழுத்தடித்து அனைத்து விடையங்களையும் மழுங்கடிப்பதுதான் அவரின்நோக்கமாக இருக்கின்றது.
ஜனாதிபதியின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு தொடர்பில் ஆரம்ப கட்டமாக தமிழ்மக்கள் மத்தியில் தெரிவிக்கும் நோக்கில் அவரின் வருகை அமைந்துள்ளது.
ஜனாதிபதியினை பொறுத்தமட்டில் காணாமல் போனவர்கள்,காணிவிடுவிப்பு,தீர்வு விடையங்கள் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான விடையங்கள் அனைத்திலும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அதனை நடைமுறைப்படுத்துபவராக இருந்தால் அவருடன் நாங்கள் எமது உரிமை சார்ந்த மக்கள் சார்ந்த விடையங்களை முன்னெடுத்துசெல்லக்கூடிய நிலைப்பாடு இருக்கும்.
ஆனால் ஜனாதிபதி அவர்கள்அந்த நிலைப்பாட்டில் இல்லை13 ஆவது திருச்சட்டமும் அதில் இருக்கின்ற அனைத்து அதிகாரங்களும் மாகாணசபைகளுக்க வழங்கப்படவேண்டும் அந்த அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதில் ஜனாதிபதி மக்களுக்கு கூறியுள்ளார்.
நீண்டகாலமாக நடைமுறையில் இல்லாத மாகாணசபை தேர்தலை நடத்தி 13 திருத்தச்சட்டத்தில் இருக்கின்ற அனைத்து அதிகாரங்களையும் வழங்குவாராக இருந்தால் அவரின் நம்பக தன்மையினை நாங்கள் ஓரளவு பரிசீலிக்க தயாராக இருக்கின்றோம்.
இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்
உண்மையாக போர் நிறைவடைந்த பின்னர் தமிழ்மக்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தினை ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் சுயநிர்ணய உரிமையினை வென்றெடுப்பதற்கான தளத்தினை பயன்படுத்தக்கூடியவாறு இந்தியாவின் ஆதரவும் பங்களிப்பும் எம்முடன் இருக்கின்றது என்பதை நாங்கள் நம்புகின்றோம்.
இலங்கையினை பொறுத்தவரையில் கடந்த காலங்களிலும் சரி தற்போதைய ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கமும் சரி இந்தியாவினை இன்றும் ஏமாற்றி வருகின்றது என்பது நன்கு தெரியும்.
வருகின்ற தேர்தலில் ஜனாதிபதிஅவர்கள் வெற்றி பெற்று மக்கள் ஆணைபெற்று ஜனாதிபதியாக பதவி ஏற்கும் வரைக்கும் இந்தியாவினை தங்கள் வசப்படுத்தி ஏமாற்றி வருகின்றார்கள். அதிலும் மிக தந்துரபாயமான அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
இந்த விடையம் தொடர்பில் இந்திய அரசாங்கமும் நன்கு அறிந்திருக்கும் என்பதையும் நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பில் இந்திய அரசாங்கம் அக்கறையுடன் இருக்கும்.இந்த தந்திரமான அரசியல் நகர்வு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இலங்கையில் பாரியளவிலான அன்நிய சக்திகளின் தலையீடுகள் கொண்டுவரப்படும்.
சீனா,பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் ஆதிக்கம் என்பது வெளிப்படையாகவே நகர்த்தப்படும் அதற்கான இரகசியமான நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கை அரசாங்கம்மேற்கொண்டுவருகின்றது.சீனாவின் நடவடிக்கையானது இரகசியமாக தமிழர் தாயகப்பகுதியில் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் அறிவோம்.
ஜனாதிபதியின் இடம்பெய்வோர் என்பது இல்லாததொழிக்கப்படும் என்ற விடையம் தொர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.இந்த விடையம் மிகமுக்கியமானது இடப்பெயர்வு இங்கே எதற்காக இடம்பெற்றது ஒரு இனஅழிப்பு இங்கே நடத்தப்பட்டது உரிமைக்கான போராட்டம் நடைபெற்றது.
அந்தவகையில் இனஅழிப்பு,இடம்பெயர்வு என்பதை மூடிமறைப்பதற்காக இதனை ஒரு கால வரையறை விடையமாக கொண்டுவந்து அழிப்பதற்கு உரிமைசார்ந்த அனைத்து விடையங்களையும் எமது மக்கள் மத்தியில் இருந்து எதிர்கால சந்ததியினரிடம் அழி;ப்பதற்கான முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்று சொல்லப்படுகின்றது ஜனநாயகம் இங்கு இல்லை ஊடகம் சார்ந்த விடையங்களில் ஊடகவியலாளர்களக் தாக்கப்படுவது ஆர்ப்பாட்டங்கள் செய்யும் போது மக்கள் அடக்கப்படுவது நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றது.தற்போது இருக்கின்ற நிலையில் ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு உண்மையாக தமிழ்மக்கள் மீது வன்முறையினை ஏவி விடுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது எதிர்காலத்தில் இவ்வாறன விடையங்கள் தொடருமாக இருந்தால் இலங்கையினை பொறுத்தமட்டில்
இலங்கை இன்று அன்நிய சக்திகளின் கையுக்குள் அகப்பட்டு இருக்கின்றது இந்தியாவின் கையிற்குள்ளும் இல்லை சிங்களவர்ளின் தலைமைத்துவமும் பறிக்கப்பட்டு சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தின் இந்த நாடு கொண்டுசெல்லப்படும் என்பதை நாங்கள் உறுதியாக சொல்கின்றோம்என்றும் தெரிவித்துள்ளார்.