காட்டு யானைகளால் நெற்செய்கைக்கு அழிவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இடைக்கட்டு குளத்தின் கீழ் விவசாயம் செய்துவரும் விவசாயிகளின் நெற்செய்கை காட்டுயானையினால் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன.
இடைக்கட்டு குளத்தின் கீழ் 60 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்னும் அறுவடைக்கு 15 நாட்கள் இருக்கும் நிலையில் நெற்பயிர்களை காட்டுயானைகள் நாசம் செய்துவருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
தொடர்ச்சியாக வரும் காட்டுயானைகளால் தாங்கள் அழிவினை சந்தித்துள்ளதாகவும் காட்டுயானையினை கட்டுப்படுத்த யானை வேலிகூட இதுவரை அமைத்துக்கொடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
நேற்று இரவு ஆறுக்கு மேற்பட்ட காட்டுயானைகள் வந்து நெற்பயிர்களை நாசம் செய்துள்ளன.
தொடர்ச்சியாக காட்டுயானையினால் அழிவினை சந்தித்துள்ளார்கள்
யானைவேலி அமைத்து தரசொல்லி பலரிடம் கோரிக்கை விட்டும் இதுவரை கிடைக்கவில்லை தேர்தல் என்றால் வீடு தேடி வருவார்கள்.
மருந்து விலை,கூலி விலை இவ்வளவிற்கு மத்தியில் விவசாயம் செய்துவரும் தாம் தொடர்ச்சியாக அழிவினையே சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.