Wednesday, May 14, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவு மருத்துவமனைக்கு முன்பாக குடும்ப பெண்மீது கத்திக்குத்து!

முல்லைத்தீவு மருத்துவமனைக்கு முன்பாக குடும்ப பெண்மீது கத்திக்குத்து!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்பாக நின்ற குடும்ப பெண்மீது கணவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் கடும்ப பெண் படுகயாமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று 31.12.2023  இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு செல்வபுரத்தினை சேர்ந்த குடும்பம் கணவன் குடும்ப முரண்பாட்டினால் குடும்பத்தினரை விட்டுபிரிந்து வாழந்துள்ள நிலையில் மனையிடனம் ஏற்பட்ட முன்கோபம் காரணமாக 55 அகவை மதிக்கத்தக்க மனைவி மாவட்ட மருத்துவமனைக்கு முன்பாக நின்றவேளை கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளார்.

சம்பத்தில் கழுத்தில் கத்திக்குத்து இடம்பெற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் வருகை தந்து கணவனை கைதுசெய்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments