முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு அன்பேசிவம் அறக்கட்டளை ஊடாக இன்று (30) உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ் சங்கம் – அன்பேசிவம் அறக்கட்டளை ஊடாக இயற்கை இடர்கள் ஏற்படும் போதெல்லாம் அவசர நிவாரண உதவிகள் வழங்கப்படுவது வழமையாகும்.
அவ்வகையில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினுடைய நிதி பங்களிப்போடு அன்பே சிவம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த நிவாரண பணிகளின் 7ஆம் கட்டப்பணியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரின் வேண்டுகோளிற்கு அமைவாக முத்துஜயன்கட்டுக்குளம் கிராம அலுவலர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு இன்று (30) உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
குறித்த நிகழ்வில் முத்துஜயன்கட்டு கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியாகத்தர் திரு.செல்வராசா சுதாகர் ராஜா ,கிராம உத்தியோகத்தர் பவிதா பேரின்பராசா மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், அன்பே சிவம் அறக்கட்டளையின் தொண்டர்களான சிவானந்தம் சுதாகரன், முருகேசு பிரதீபன் மற்றும் செல்லையா சுஜிதரன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு இந்த உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.
ஒவ்வொன்றும் தலா 2000 ரூபா பெறுமதியான நூறு உலருணவு பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.