கரைதுறைப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் சிலாவத்தை கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு பெரண்டீனா நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள் இன்று(29.12.23) வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
சிலாவத்தை பொதுநோக்கு மண்டபத்தில் சிலாவத்தை கிராம சேவையாளர் ப.தர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் க.கயூரன் அவர்களும் பெரண்டீனா நிறுவனத்தின் பிரதிபொது முகாமையாளர் மு.பதூர்தீன் ரகீம் சமூக மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் சோ.ஜெயச்சந்திரன்,இளைஞர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் யே.கேமலதன், உள்ளிட்ட பெரண்டீனா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு மக்களுக்கான வெள்ள உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்துள்ளார்கள்.
தலா 5ஆயிரம் ரூபா பெறுமதியான 250 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளன.